Skip to main content

திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்! 

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

tt

 

இன்று காலை முதல் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துவருகிறது. கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னையின் புறகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்தது. 

 

இந்நிலையில், சென்னையில் இன்னும் இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக வட கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான அளவில் வரை மழையிருக்கும்.

 

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்