Heavy rain with thunder in 3 hours ... Warning for 8 districts!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்றுமணி நேரத்தில் 8 தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.