Published on 22/09/2021 | Edited on 22/09/2021
![Heavy rain for three days in Tamil Nadu!](http://image.nakkheeran.in/cdn/farfuture/_uaeemmyZj6m2WghNLcT5SGx3sITd56AgRmTyPDAsGk/1632296669/sites/default/files/inline-images/RAIN.jpg)
தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (22.09.2021) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு - மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசம்பாக்கத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வாணியம்பாடி, செய்யாறில் தலா 11 சென்டி மீட்டர் மழையும், சென்னை டி.ஜி.பி அலுவலகப் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.