தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிர பிரச்சார வழிமுறைகளை கையாளத் தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார் எழுந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியோடு நிறைவடைய இருக்கிறது. இதனால் இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். பணம் கொடுப்பதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.