Skip to main content

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதியாகுமா? இன்று தீர்ப்பு!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த் தூக்கு தண்டனைய உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை உறுதி செய்தது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தஸ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து, தஸ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story

சிறுமி ஹாசினி கொலை வழக்கு தீர்ப்பிற்கு தஷ்வந்த் மேல்முறையீடு

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், தூக்குதண்டனைக் குற்றவாளி தஷ்வந்த் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த வருடம் சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி திடீரென காணாமல் போனார். பின்பு அவரை அந்தப்பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் கடத்தி வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார். இந்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கொலையாளி தஷ்வந்த்திற்கு தூக்குத்தண்டனை அறிவித்து தீர்ப்பளித்தது.

hashini

இதைத்தொடர்ந்து தற்போது தஷ்வந்த் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தங்களுடைய தரப்பை முழுமையாக விசாரிக்காமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் சாட்சி தரப்புகள் முறையான விதிப்படி கையாளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பை நிராகரிக்ககோரி அந்த மனுவில் தஷ்வந்த் வேண்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விமலா மற்றும் ராமதிலகம் அமர்வு  இந்த மனு தொடர்பாக நான்கு வாரத்தில் போலீசார் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.