Skip to main content

நாளை முதல் ஹால்டிக்கெட்... அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

hall ticket from tomorrow ... Government Examinations Directorate announcement!

 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, கடந்த 19ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்.

 

முதல்முறையாக தசம எண்களில் மதிப்பெண் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தி அளிக்கவில்லை என கருதும் மாணவர்கள் தேர்வெழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு கடந்த 23 ஆ, தேதி தொடங்கியது.

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தேவையில்லை. மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் தேர்வெழுத விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வெளியிடப்படுகிறது. நாளை முற்பகல் 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்தவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே 12 ஆம் வகுப்பு தேர்வின் இறுதி மதிப்பெண் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்