![gunder act on school teacher Rajagopal](http://image.nakkheeran.in/cdn/farfuture/BIsnCGfICdFadEz6tmZb2y6baGYemiyH7UNgfoqVEvQ/1624623828/sites/default/files/inline-images/TEA1_2.jpg)
சென்னை கே.கே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆன்லைன் வகுப்பில் வரம்பு மீறி நடந்து கொண்டது போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இப்பள்ளியில் ஏற்பட்ட இந்த பாலியல் அத்துமீறல் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இதேபோல் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான மாணவிகள், முன்னாள் மாணவிகள் தங்களது புகார்களை காவல்துறைக்கு தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பலர் போக்சோ சட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளன.ர் இதேபோல் தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜ் என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதேபோல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.