Published on 24/01/2022 | Edited on 24/01/2022
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் 'Take Home' முறையில் தேர்வு நடைபெறும். செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதலாம். விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள், இறுதியாகப் பயின்ற கல்லூரிகளைத் தொடர்புக் கொண்டு தேர்வு அனுமதிச் சீட்டை பெறலாம். கூகுள் கிளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும்.
தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்; நேரில் வந்து தர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.