Skip to main content

விபத்தை ஏற்படுத்தப்போகும் அரசுப்பேருந்து! -சேசிங் அண்ட் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
govt bus


பயணிகளை சுமந்து செல்லும் அப்பேருந்தை பார்த்து, ‘விபத்தை ஏற்படுத்தும் பேருந்து’ என்று சொல்லக்கூடாதுதான். ஆனால், அப்பேருந்தின் பின்வாசல் கதவு அப்படியிருந்தால் இப்படிச்சொல்லி எச்சரிக்கைப்படுத்திதான் ஆகவேண்டும். இல்லையென்றால் நிச்சயம் யாருடைய உயிரையாவது பலிவாங்கிவிடும்.
 

 

 

2018 ஆகஸ்டு 31 ந்தேதி மதியம் 2 மணியளவில் கோயம்பேடு டூ ஆற்காடு அரசுப்பேருந்து (வண்டி எண்: தநா 23 நா 2387) சென்னை மதுரவாயல் சாலை வழியாக சீறிப்பாய்ந்து சென்றுகொண்டிருந்தது.  அப்போது, பின்வாசல் கதவானது தாழ்ப்பாள் இல்லாததால் கயிறுபோட்டு வெளிப்புறமாக கட்டப்பட்டிருந்தது. எப்போது, வேண்டுமானாலும் கயிறு அவிழ்ந்து; அறுந்து கதவு திறக்கப்பட்டு… பின்னால் வரும் வாகனத்தில்;வாகன ஓட்டிகள் மீது மோதிவிடுமோ என்ற உயிரச்சத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தது.  

 

govt bus


 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றால்,  ‘அப்படியெல்லாம் இல்லையே பேருந்து நல்லாத்தானே இருக்கு?’ என்று அசால்டாக சமாளித்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், நமது செல்ஃபோன் மூலம் ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தோம். நமது டூவீலர் பின்னால் மற்றொருவர் அமர்ந்திருந்தால் அவர் மூலம் ஃபோட்டோ எடுப்பது எளிது. ஆனால், அப்படி யாரும் இல்லாததால் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் அப்பேருந்தை கவனத்துடன் டூவீலரில் பின் தொடர்ந்தோம். சில நிமிட சேசிங்கிற்குப்பிறகு கயிறு போட்டு கட்டப்பட்டிருக்கும் அந்த பேருந்தின் கதவு, பேருந்தின் எண் அனைத்தையும் வீடியோ பதிவு செய்துகொண்டோம்.
 

 

 

இதுகுறித்து, கோயம்பேடு பேருந்துநிலையத்தின் போக்குவரத்து உதவி ஆணையர் ஜான் சுந்தரின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, வாகன எண் மற்றும் விவரங்களை குறித்துக் கொண்டதோடு, “உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் சார்” என்றார் உறுதியோடும் அக்கறையோடும்.
 

நம், கண்ணில் பட்ட பேருந்தின் நிலைமை இப்படி. நம் கண்ணில் படாத பல பேருந்துகளின் நிலைமை… வலைதளங்களில் செய்திகளாக உலாவும் பேருந்துகளின் நிலைமை இதைவிட மோசம். ஆனாலும், நம் கண்ணில் பட்டதை எச்சரித்து விபத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கவேண்டியது நமது கடமையல்லவா?!
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.