வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூபாய் 6 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பல மாதங்கள் பூங்கா மூடப்பட்டிருந்ததால், வருவாய் கிடைக்கவில்லை என்றும் விலங்குகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், முதன்மை வனப்பாதுகாவலர் அரசிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக 6 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
வண்டலூர் பூங்காவில், விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு, இதர செலவுகள் என்று மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 1.28 கோடி செலவாகிறது.