தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், கடந்த வாரம் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,கடந்த 18ஆம் தேதி காலை அவர் தலைமை நீதிபதி முன்பு தமிழ்நாடு ஆளுநராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடுஆளுநராக பொறுப்பேற்றபின் முதல்முறையாக ஆர்.என். ரவி நாளை (23.09.2021) அல்லது நாளை மறுநாள் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் தமிழ்நாடு ஆளுநர், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.