புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்தப் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன. சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அ.தி.மு.க. எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்" என்று தெரிவித்திருந்தார். இன்று இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட தமிழக அரசு தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.