Published on 17/09/2021 | Edited on 17/09/2021
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் எதிரொலியாகச் சுங்கத் துறை துணை ஆணையர் சரவணகுமார் மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன்(23) என்ற பயணி தனது உடலில் மறைத்து ரூ.40.5 லட்சம் மதிப்பிலான 840 கிராம் கடத்தல் தங்கத்தை எடுத்து வந்ததை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.