Skip to main content

குறைந்தவிலைக்கு தங்கம்;செல்போனில் அழைக்கும் மோசடி கும்பல்!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

இன்றைக்கு உள்ள பொருளாதர சூழ்நிலையில் ஈசியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிற பணத்தையும் இழந்து வருகிற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. 

 

மக்களின் இந்த பேராசை மனநிலையை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் மோசடி கும்பல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது. இதற்கு பெரும்பாலும் செல்போன் அழைப்பையே பயன்படுத்துகிறார்கள். 

 

முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அந்த போனில் பேசிய நபர் தான் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்திலிருந்து பேசுவதாகவும், அவர் வசிக்கும் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது செப்பு குடத்தில் தங்க காசுகள் நிறைய கிடைத்ததாகவும் அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். 

 

Gold for low price;fraud gang call on cellphone!

 

அதனை நம்பாத முசிறியை சேர்ந்த நபர் அவரிடம் தொடர்ந்து பேசியதில் ஒரு கிலோ எடையுள்ள தங்க காசுகளை ரூ.10 லட்சத்திற்கு தருவதாகவும், முதலில் நேரில் வந்து மாதிரிக்கு இலவசமாக தரும் தங்க காசுகளை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளார். வங்கி மேலாளர் எனக்கூறி போனில் ஏடிஎம் கார்டு எண்ணை கேட்டு வங்கி கணக்கில் இருந்து திருடும் மோசடி கும்பல் தற்போது தங்கம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். 

 

இது குறித்து முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கூறுகையில், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக மோசடி கும்பல் போன் மூலம் அழைக்கும் தகவலை நம்பி யாரும் செல்லக் கூடாது. மாதிரிக்கு தங்க காசு முதலில் கொடுத்துவிட்டு பின்னர் லட்சக்கணக்கில் பணம் கொண்டுவரச் செய்து பணத்தை பறித்துக்கொண்டு துரத்தி விட வாய்ப்புள்ளது. அல்லது மாதிரி தங்க காசு வாங்கிட அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும்போது, சென்ற நபரை பிடித்து ரகசிய இடத்தில் அடைத்து வைத்து கொண்டு குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டவும் வாய்ப்புள்ளது. 

 

எனவே மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கூறினார். முசிறியை சேர்ந்த நபர் இது குறித்து முழு விபரத்தையும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் ஏமாறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தற்போது இதே போன்ற மோசடி கும்பல் பல்வேறு வகையில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மக்களே உஷார்! அடுத்தடுத்து வரும் ஃபோன் கால் - மிரட்டும் கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 gang extorts money from people claiming to be involved in cannabis trafficking

சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கொள்ளையர்கள், ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தொடர்பு கொண்டு சில விபரங்கள் கேட்பார்கள். அப்போது ஓடிபி எண் கூறினால் மட்டுமே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும். ஆனால் இப்போது பல வகைகளிலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவரது பான் கார்டு எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல விஷயங்களை மோசடியில் ஈடுபடுபவர்கள் சுலபமாக எடுத்து விடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து மோசடி கும்பல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதும், இந்த முறையில் ஏமாற்ற முடியவில்லை. அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு லிங்க் அனுப்பி, அதனை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் வரும் அல்லது வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மோசடி அறிவிப்புகளைக் கொடுத்து குறிப்பிட்ட அந்த லிங்கை தொடும்போது நமது பணம் பறிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபர்கள், தற்போது பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், தங்களைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் என்றும், மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தற்போது மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதே பாணியில் கடந்த 4  நாட்களில் 2 சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை கடந்த சில  தினங்களுக்கு முன்பு, சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இந்த முகவரிக்கு போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண்ணிடம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க தங்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதன்படி, அந்தப் பெண்ணும் 21,400 ரூபாயை உடனே அனுப்பியுள்ளார். இந்தியன் வங்கிக் கணக்கு மூலம் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோன்று இந்த சம்பவம் நடந்த மறுதினம், ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் வசித்து வரும் ராம் திலக் என்ற காவலரின் மனைவி அனுஷாவிற்கும் இதே பாணியில் போன் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்களின் ஆதார் எண்ணை வைத்து போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் கூறி, பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அறிய முயன்றுள்ளனர். ஆனால் அனுஷா அதனைத் தவிர்த்து விட்டார். அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் பேசிய அனுஷா, என் மீது போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு உள்ளது என்றால் சென்னை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அவர்கள் எங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள் எனத் தைரியமாகக் கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வட மாநில கும்பல் தொடர்பைத் துண்டித்து விட்டனர். இதில் முழுக்க முழுக்க மோசடி கும்பல் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அதன் பிறகு அனுஷா நடந்தவற்றை தனது கணவர் ராம் திலக்கிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்‌. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் இந்த நூதன மோசடி குறித்து விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.