தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் அறிவித்திருந்தத நிலையில், இரண்டு தவணையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கரோனா நிவாரண தொகையான 4000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஜூலை 31-க்குள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1முதல் நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மே 10 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
99 சதவீதத்துக்கு மேலாக அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள தமிழக அரசு, புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து இன்றியமையா பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.