publive-image

Advertisment

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வரும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மேற்கத்திய, குஜராத்திய உடைகளை அணிந்த காந்தி மதுரையில் உழவர்களின் அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு தினம் இன்று. 'எனது வாழ்க்கையே எனது செய்தி' என்று அதனால் தான் அவரால் உறுதியாகச் சொல்ல முடிந்தது.

இந்த சமூகத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் உணர்வுகளை,வாழ்வை காந்தி வாழ்நாள் முழுவதும்,உலகெங்கும் சுமந்து திரிந்தார்.மோடி அரசு விவசாய விரோத வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மீதான ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அதை எதிர்த்து நிற்க காந்தியின் கரம்பற்றுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.