Skip to main content

மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி நான்காவது நாளாக போராட்டம்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Fishermen for fourth day demanding release of boats

 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், 10 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

 

அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். ராமேஸ்வரத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதேபோல், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் ஒருநாளைக்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.