Skip to main content

''முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்''-நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021
'' Former Minister Manikandan should apologize '' - Lawyer who sent notice!

 

தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக  நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகையின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும், தானும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாகவும், அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், திரைப்பட நடிகை (சாந்தினி) சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

 

'' Former Minister Manikandan should apologize '' - Lawyer who sent notice!

 

இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பில்லை என்றும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன், நடிகையும், வழக்கறிஞர் சுதன் என்பவரும் பொய்ப் புகார் அளித்ததாக தெரிவித்தார். வழக்கறிஞர் சுதன் தன்னிடம் 3 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழக்கறிஞர் சுதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

தன் மீதான புகார் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மணிகண்டன் தான், மே 23ஆம் தேதி சென்னையில் தன்னை வந்து சந்தித்து, தனக்கெதிரான நடவடிக்கையை கைவிடவும், சமரசமாக செல்லவும், பணத்தைப் பெற்றுகொள்ளவும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.  

 

இதற்கு நடிகை ஒத்துக்கொள்ளாமல், சட்ட நடவடிக்கையை தொடர அறிவுறுத்திய நிலையில், தனக்கெதிராக மணிகண்டன் அவதூறு பரப்புவதாக வழக்கறிஞர் சுதன் குறிப்பிட்டுள்ளார்.

 

பணம் பறிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாக கூறிய அவதூறு கருத்துக்கு, மணிகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் வழக்கறிஞர் சுதன் அனுப்பிய நோட்டீசில் எச்சரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் தலைமறைவு; ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
serial absconding; Lookout notice for Rajesh Das

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த  வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக சரணடைய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ்தாஸ் தலைமறைவானார். கடந்த 9 ஆம் தேதி அவரை கைது செய்ய போலீசார் சென்னை தையூர் கோமநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அதன்பிறகு வீட்டின் வாயில் காவலாளிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  

தற்போது வரை ராஜேஷ் தாஸ் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட்  நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.