Skip to main content

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சிறையில் அடைப்பு!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

former judge karnan recovered coronavirus prison

 

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறாகப் பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தது. அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும், இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

 

இந்தநிலையில், சென்னையை அடுத்த ஆவடியிலிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

 

சிறையில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் கர்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

 

இந்த நிலையில், கரோனாவில் இருந்து குணமடைந்ததால் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீண்டும் புழல் சிறையிலடைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்