ரதக

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கியநண்பர் சேலம் இளங்கோவன் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

Advertisment

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள், பணம் முதலியவை வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சில இடங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில்அதிமுக பிரமுகரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். பணப்பட்டுவாடா புகார் வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.