Skip to main content

ஒணம் பண்டிகை இல்லாததால் பூ சந்தையில் களையிழந்த பூக்கள் விற்பனை!

Published on 23/08/2018 | Edited on 27/08/2018
flower


குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தை தென் மாவட்ங்களில் உள்ள முக்கியமான் பூ சந்தை ஆகும். இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்கள் உட்பட பெங்களூரில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பூக்களில் கேரளா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தினமும் கேரளா வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் இங்கு குவிகின்றனர். ஆனி, ஆடி மாதங்களில் பூ வரத்து அதிகமாக இருந்தாலும் விலையும் விற்பனையும் குறைவாக தான் இருக்கும். இதனால் அடுத்து வரும் ஆவணி மாதத்தில் கேரளாவில் ஒணம் பண்டிகையொட்டி பூக்களின் விலையும் விற்பனையும் அதிகமாக இருக்கும்.

ஒணம் பண்டிகையொட்டி தினமும் 20 டன் வரை பூக்கள் கேரளாவுக்கு விற்பனை ஆகும். இந்த ஆண்டு 25 டன் பூக்கள் வரை விற்பனையாகும் என்று வியாபாரிகளும் பூக்கள் உற்பத்தியாளா்களும் நம்பியிருந்தனர். ஆனால் இயற்கை வந்து அதை தொலைத்து விட்டதாக வியாபாரிகள் வருத்தத்துடன் கூறினார்கள்.

தென்மேற்கு பருவ மழையால் கேரளாவில் ஓணப்பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அத்தப்பூ கோலத்துக்காக எந்த வியாபாரியும் பூக்கள் வாங்கி செல்லவில்லை. மாறாக கோவிலுக்கும் திருமணம் நிகழ்ச்சிகளுக்கும் தான் வழக்கம்போல் பூக்களை வாங்கி செல்கிறார்கள். அதுவும் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்ட வியாபாரிகள் மட்டும் தான் வருகின்றனர்.

இதனால் தினமும் 5 டன்னுக்கும் குறைவாக தான் பூக்கள் விற்பனை ஆகிறது என்று கூறினார்கள்.

சார்ந்த செய்திகள்