கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 571இல் இருந்து 621ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அம்மாட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். மேலும் கரோனா சிகிச்சைக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவியும் குணமடைந்து வீடு திரும்பினார் என்று கூறியுள்ளார். மேலும், குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட 5 பேரும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார். இதன்முலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.