Skip to main content

அயனாவரம் சிறுமி பாலியல் புகாரில் தப்பித்த ஐந்துபேர்!-திடுக்கிடவைக்கும் புதிய தகவல்கள்!  

Published on 09/08/2018 | Edited on 27/08/2018

 

child rape

 

 

 

அயனாவரம் தனியார் அப்பார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை 17-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாய் கொடுத்த பகீர் புகார் தமிழகத்தையே அதிரவைத்தது. இதனைத்தொடர்ந்து, செக்யூரிட்டிகள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரிஷியன்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் 17 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. ஆனால், இச்சம்பவத்தில் மிகவும் தொடர்புள்ள 5 பேர் தப்பவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பகீர் கிளப்புறார் விசாரணை அதிகாரி ஒருவர்.

 

இதுகுறித்து, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களிடம் நாம் விசாரித்தபோது, “சம்பவம் நடந்த அப்பார்ட்மெண்டிற்கு அடிக்கடி மூன்று இளைஞர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமி வசித்த ’பி’ ப்ளாக்கிற்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஒருமுறை, யார் நீங்கள்? என்று அப்பார்ட்மெண்டிலுள்ள நிர்வாகிகள் கேட்டபோது, தான் ஒரு போலீஸ்க்காரரின் மகன் என்று சொன்னதோடு அப்பாவுக்கு ஃபோன் போட்டும் கொடுத்தான் அந்த இளைஞன். அப்போது, அந்த இளைஞனின் அப்பா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஃபோனில் பேசியிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி”என்றார்கள்.

 

மேலும், விசாரணை அதிகாரி நம்மிடம், “சிறுமியின் குடும்பம் காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புகூட இரவு 1 மணிக்குமேல் அந்த மூன்று இளைஞர்களும் அப்பார்மெண்ட்டுக்கு வந்திருக்கிறார்கள்.  ‘பி’ ப்ளாக் மூன்றாவது மாடிக்கு சென்று பிறகு, அந்த மூன்று இளைஞர்களும் அப்படியே டி -பிளாக் எஸ்-லிஃப்ட் எனப்படும் சர்வீஸ் லிஃப்ட்டில் 10-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள். இங்குதான், பங்சன் ஹால், யோகா, ஜிம் எல்லாம் உள்ளன. மேலும்,டி--பிளாக்கில்தான் 9-வது மாடியிலிருந்து 15-வது மாடி வரை பலவீடுகள் விற்காமல் காலியாக இருக்கின்றன. அங்கிருந்து, 15-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது, மொட்டைமாடி. எதற்காக அந்த நேரத்தில் அந்த இளைஞர்கள் அங்கு சென்றார்கள்? யாருடன் சென்றார்கள்? ப்ளாக்மெயில் செய்து யாரையாவது அழைத்து சென்றார்களா? என்கிற பல சந்தேகங்கள் வர, அதுகுறித்தும் தீவிரமாக விசாரித்துவருகிறோம்.

 

 

 

அந்த அபார்ட்மெண்டில் ஏ,பி,சி,டி என 15 மாடிகள் கொண்ட நான்கு ப்ளாக்குகள் உள்ளன.  1 ப்ளாக்கிற்கு 128 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அவரவர்களும் தனித்தனியாக தங்களது பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களை பொறுத்திவைத்திருக்கிறார்கள். இந்த, சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணிப்பது அதற்கான ஆபரேட்டர் ரூம் சாவியானது செக்கியூரிட்டி மேனேஜர் சிவா, சூப்பர்வைஸர் பூபதி ஆகியோரின் கண்ட்ரோலில்தான் உள்ளது. சிறுமியின் தாய் புகாரில் குறிப்பிட்டதுபோல பாலியல் வன்புணர்வின்போது சி.சி.டி.வி. கேமராக்களை ஆஃப் செய்யவேண்டும் என்றால் சிவா, பூபதி இரண்டு பேரின் ஒப்புதல் இல்லாமல் வாய்ப்பே இல்லை. இவர்களைத்தாண்டி அந்த ரூமிற்கு வேறு யாரும் செல்லவும் முடியாது. அதற்கான, சாவி இவர்களிடம்தான் இருக்கும். ஆனால், இவர்கள் இரண்டு பேருடைய பெயரும் எஃப்.ஐ.ஆரில். சேர்க்கப்படவில்லை.  இந்த அபார்ட்மெண்டில் இரண்டுவிதமான செக்கியூரிட்டி ஏஜென்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலும் யு.கே.எஃப்.எஸ். ஏஜென்சியின் செக்யூரிட்டிகளே அதிகமாக கைதாகியிருக்கிறார்கள்.

 

 

 

அதேபோல், 500 கிலோ வாட்ஸ் கொண்ட 2 ஜனரேட்டர்கள் உள்ளன. மேலும், இந்த அப்பார்ட்மெண்டுக்கு என தனி ட்ரான்ஸ்ஃபார்மரே உள்ளது. அதனால், கரண்ட் கட் ஆவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படியே, கட் ஆனாலும் ஜனரேட்டர் மூலம் ஆட்டோமேட்டிக்காக கரண்ட் வந்துவிடும். ஒருவேளை, சி.சி.டி.வியை ஆஃப் செய்துவிட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்தால் ஆஃப் செய்வதற்கு முந்தைய வீடியோ பதிவுகள் இருக்குமல்லவா?  4 ப்ளாக் கொண்ட 500-க்குமேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கண்காணித்துக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்டில் ஒரு கேமராவில்கூடவா அச்சிறுமியை அழைத்துசெல்லும் காட்சி பதிவாகவில்லை? ஏழுமாதங்களாக எப்படி கேமராவை ஆஃப் செய்தார்கள் என்ற கோணத்திலும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அப்பார்ட்மெண்டுக்கு சம்பந்தமில்லாத அந்த மூன்றுபேர் தங்களது குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள காவல்துறை அல்லது வேறு செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்களா? அல்லது அக்குடும்பத்தினரை வேறு விதத்தில் ப்ளாக் மெயில் செய்துகொண்டிருக்கிறார்களா? என்றும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். சிறுமி விவகாரத்தில் இன்னும் வேறு யார் யார் இருந்தாலும் கைது நிச்சயம்” என்கிறார் அதிரடியாக.

 

தமிழகத்தையே பதறவைத்த சிறுமியின் விவகாரத்தில் இன்னும் ஐந்துபேர் சிக்க இருக்கிறார்கள். அவர்களிடம், தீர விசாரித்தால்தான் இன்னும் அதிகாரபலத்தில் இருந்துகொண்டு தப்பித்தவர்கள் யார் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும். கடந்த, 15 நாட்களுக்கு முன் சி.சி.சி.டி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தாலே இன்னும் பலர் சிக்குவார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.