Fire at star hotel in Trichy!

திருச்சியில் தனியார் நட்சத்திர விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் கோகினூர் சிக்னல் அருகே திருச்சி நகரப்பேருந்து சாலைக்கும் சிக்னல் பகுதிக்கும் இடையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. மொத்தம் 5 மாடி கட்டடம் கொண்ட இந்த நட்சத்திர ஹோட்டலில் முதல் தளத்தில் ஸ்பா மற்றும் மதுபானம் அடுக்கி வைக்கும் பிரிவு மற்றும் ஹோட்டலுக்கான கணக்குப் பிரிவு இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் திடீரென அந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென கரும்புகை சூழ்ந்ததால் அந்த ஹோட்டலில் 40க்கும் மேற்பட்ட அறைகளில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் தீவிபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment