Published on 07/09/2021 | Edited on 07/09/2021
இன்று (07.09.2021) சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலக வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தமிழ்நாடு சார்பில் மத்திய அரசு ஊழியர்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்கக்கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், Compassionate Appointment ceiling 5% என்பதை நீக்கக்கோரியும், கரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அரசு உடனே ரூபாய் 15 லட்சம் நிவாரண தொகையை வழங்கவேண்டியும், National monetization Pipeline என்ற பெயரில் இந்திய மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.