Published on 16/11/2019 | Edited on 16/11/2019
சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு மூன்று ஆசிரியர்கள்தான் காரணம் என தன்னுடைய மொபைலில் நோட்டும் செய்திருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஃபாத்திமாவின் தந்தையிடமும், உறவினரிடமும் விசாரணை நடைபெற்றது.

நான்கு மணிநேரமாக நடைபெற்ற விசாரணைக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசம் அளித்துள்ளோம்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை என காவல்துறை உறுதி அளித்துள்ளது. விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.