Farmers Seminar at Chidambaram

தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்ட மாநில அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை இரண்டு நாள் கருத்தரங்கம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று (23.02.2021) சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டு தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

Advertisment

வேளாண் துறை துணை இயக்குனர் பிரேம்சாந்தி அனைவரையும் வரவேற்றார். சென்னை வேளாண் துறை இணை இயக்குனர் சேகர், கடலூர் ரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், சென்னை வேளாண்மை துணை இயக்குநர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், இளங்கோவன், மாவட்ட தொழில்மையம், கால்நடைத்துறை மண்டல இயக்குனர் குபேந்திரன், மீன்வளத்துறை மண்டல துணை இயக்குனர் காத்தவராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், நீர்வளம் உள்ளிட்ட துறைகள் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்து வேளாண் சார்ந்த துறைகளில் இருந்து கலந்துகொண்டனர்.

Farmers Seminar at Chidambaram

Advertisment

இதில் விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைபடுத்துதல், விளை பொருட்களை விவசாயிகளே மதிபூட்டபட்ட பொருட்கள் செய்து விற்பனை செய்வது உள்ளிட்டவைவிளக்கி கூறப்பட்டது. இதில் அரசு எவ்வாறு திட்டங்களை உருவாக்கியுள்ளது, இதனை பயன்டுத்துவது பற்றியும், பண்ணைகுட்டை அமைத்து மீன்வளர்த்தால் எவ்வாறு பயன் அடையலாம் என்பது பற்றியும் விளக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் நேரடியாக இயற்கை முறையில் தயாரித்த பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். இதனை கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவரும் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியின் முடிவில் சிதம்பரம் வேளாண்மை அலுவலர் அமுதா, கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.