Published on 10/04/2021 | Edited on 10/04/2021
பயிர் சாகுபடிக்கான முக்கிய கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என மத்திய அமைச்சர் மஞ்சுத் மான்வியா தெரிவித்துள்ளார். பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய கூட்டு உரங்களின் விலையை உரம் உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60% உயர்த்தின.
இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சியினரும் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை எழுப்பி வந்தன. இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுத் மான்வியா வெளியிட்ட வீடியோவில் அவர், உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தையில், தற்போதைக்கு உரங்களின் விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் உரங்களைப் பழைய விலைக்கே வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.