Skip to main content

அர்ச்சகர் இல்லாத பிரசித்தி பெற்ற ஆலயம்... தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் பக்தர்கள்!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Famous temple without a priest ... Devotees making demands to the Tamil Nadu government

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது திருவட்டத்துறை கிராமம். வெள்ளாற்றின் கரையில் அழகாக அமைந்துள்ள இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு அரத்துறைநாதர், தீர்த்தபுரீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. இங்குள்ள அம்மன் திரிபுரசுந்தரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. இவ்வாலய இறைவனும், அம்பாளும் சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற ஆலயம். அப்படி பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். இந்த ஆலய இறைவனைப் பற்றி பாடுவதற்காக இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை, முத்துபல்லக்கு, முத்துக்குடை வழங்கி வரவேற்ற அதிசயம் நிறைந்த ஊர்.

 

திருவரத்துறை எனும் திருவட்டத்துறை சீர்காழியைச் சேர்ந்த சிறுவன் திருஞானசம்பந்தர் அங்குள்ள சிவன் ஆலயத்தின் குளக்கரையில் பசியால் அழுதுகொண்டிருந்தபோது பார்வதி தேவியால் ஞானப்பால் கொடுத்து அன்னையின் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர், அந்த சிறு வயதிலேயே ஊர் ஊராகச் சென்று சிவாலயங்களில் உள்ள இறைவனையும் அம்பாளையும் பற்றி பாட ஆரம்பித்தார். அப்படி பாடிக்கொண்டு வரும்போது திருவட்டத்துறை இறைவனைப் பற்றியும் பாடுவதற்காக வந்துகொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் மக்கள் நடைப்பயணம் மூலம்தான் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். அதைப்போல சிறுவன் திருஞானசம்பந்தரால் நீண்ட தூரம் நடக்க முடியாதபோது அவரது தந்தை அவரை தோளில் சுமந்து வந்தார். அப்படி திருவட்டத்துறை நோக்கி வரும்போது இறையூர் என்ற ஊர் வந்ததும் இருட்டிவிட்டது. இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடுவது என முடிவு செய்து தந்தையும் மகனும் மற்றும் அவர்களுடன் வந்த சிவனடியார்களும் இறையூரில் இரவு பொழுதை கழித்தனர்.

 

அதே இரவு திருவட்டத்துறை ஊரில் உள்ள அரத்துறைநாதர் ஆலய தர்மகர்த்தாக்கள் சிலர் கனவில் தோன்றிய இறைவன், “சீர்காழியிலிருந்து சிறுவன் திருஞானசம்பந்தன், அவனது தந்தை தோளில் சுமந்தபடி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் என்னைப் பற்றி பாட வந்துகொண்டிருக்கிறான். அவர்கள் தற்போது இறையூரில் தங்கியுள்ளனர். நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அங்கே முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவை தயாராக உள்ளன. அவைகளை எடுத்துச் சென்று உறையூரில் உள்ள திருஞானசம்பந்தரை அதில் அமரவைத்து இங்கு அழைத்துவந்து எம்மைப் பற்றி பாடச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு இறைவன் மறைந்தார். காலையில் எழுந்த தர்மகர்த்தா ஒருவர் மற்றொரு தர்மகர்த்தாவிடம் சென்று இரவில் தமது கனவில் தோன்றிய இறைவன் கூறிய விஷயத்தைப் பற்றி சொல்லியுள்ளார். அதைக் கேட்ட அந்த தர்மகர்த்தா, தானும் அதே போன்று கனவு கண்டதாக கூறியுள்ளார். இவர்களைப் போலவே மற்ற அனைத்து தர்மகர்த்தாக்கள் கனவிலும் இறைவன் தோன்றி கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.

 

Famous temple without a priest ... Devotees making demands to the Tamil Nadu government

 

இதையடுத்து அனைவரும் விரைந்து சென்று கோயில் கதவை திறந்தனர். என்னே அதிசயம், இறைவன் கனவில் கூறியது போலவே முத்துச் சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை அனைத்தும் தயாராக இருந்தன. தர்மகர்த்தாக்களும் ஊர் மக்களும் இறைவனின் மகிமையைக் கண்டு மெய் சிலிர்த்தனர். தெண்டனிட்டு இறைவனை வணங்கிவிட்டு இறைவன் கூறியபடி முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவற்றை சுமந்துகொண்டு திருஞானசம்பந்தரை அழைத்துவர இறையூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்படி செல்லும் வழியில் எதிரில் தனது தந்தையுடனும் சிவனடியார்களுடனும் திருஞானசம்பந்தர் எதிரே வந்துகொண்டிருந்தார். இப்படி இருதரப்பினரும் கூடிய இடம் தற்போது கூடலூர் என்ற ஊராக அமைந்துள்ளது. தர்மகர்த்தாக்கள் இறைவன் அளித்த முத்துச்சிவிகை, முத்துப் பல்லக்கில் திருஞானசம்பந்தரை அமரவைத்து முத்துக் குடை பிடித்தபடி திருவட்டத்துறை ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த திருஞானசம்பந்தர் இறைவன் தனக்கு அளித்த வெகுமதியை கண்டு மனம் உருகி இறைவனையும், அம்பாளையும் பற்றி பாடினார்.

 

இப்படி திருஞானசம்பந்தருக்கு வெகுமதி அளித்து அதிசயம் நிகழ்த்திக் காட்டிய இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய தற்போது அர்ச்சகர்கள் இல்லை. ஏற்கனவே இங்கு அர்ச்சகராக பணி செய்துவந்தவர் சாமிநாத குருக்கள். இவர் நீண்டகாலம் இவ்வாலய இறைவனுக்கும், அம்பாளுக்கும் இறை பக்தியுடன் பணி செய்துவந்தார். வயது மூப்பின் காரணமாக ஓராண்டுக்கு முன்பு அவர் இயற்கை எய்தினார். அதன்பிறகு இவ்வாலயத்திற்கு நிரந்தரமான அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத்திற்கு அதன் அதிகாரிகள் நிரந்தரமான அர்ச்சகர் ஒருவரை நியமிக்காமல் அலட்சியமாக உள்ளனர். தினசரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனையும் அம்பாளையும் வழிபட வரும் பக்தர்கள் பூஜை செய்ய அபிஷேகம் செய்ய அர்ச்சகர் இல்லாமல் தவிக்கிறார்கள், அல்லாடுகிறார்கள். எனவே நிரந்தரமான ஒரு அர்ச்சகரை பணியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களும், ஊர் மக்களும் கடந்த ஓராண்டாக வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.