police

Advertisment

நெல்லையில் திருமணமான பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் இட்டமொழியில் திருமணமான பெண் ஒருவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், நாகலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டதாக காவல்நிலையத்தில் பெண் தரப்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக நாகலிங்கத்தை கைது செய்துள்ள வள்ளியூர் மகளிர் போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். நெல்லையில் திருமணமான பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.