
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''சின்ன கலைவாணர், சமூக சேவகர், நெருங்கிய நண்பர் விவேக் இறந்தசெய்தி மிகுந்த வேதனையைத்தருகிறது. சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாளும் மறக்கமுடியாதநாட்கள். விவேக்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)