Skip to main content

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா? - ஓபிஎஸ் பதிலால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

ops

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தொடர்ந்து அவர் அடையாளப்படுத்தி வந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மறுப்பு தெரிவித்துவருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற குரலும் அதிமுக வட்டாரத்தில் ஒலிக்கிறது. 

 

இந்த நிலையில், இன்று (25.10.2021) மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்தார். மேலும், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம் எனத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்படுவதாகவும் கூறினார்.

 

அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மாறுபட்ட கருத்தைக் கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியையும், கட்சிக்குள் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்