அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சேலம் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இந்த வழக்கை உடனடியாக விசாரித்து 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதனை பொது நல வழக்காக கருதி மனுதாரர் வழக்கறிஞர் மிலானிக்கு பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125ஏ(1), 125ஏ(2), 123ஏ(3) ஆகிய மூண்டு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.