தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.