Skip to main content

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து மாணவன் உயிரிழப்பு... அதிமுக ஜெயக்குமார் மகள் மீது வழக்கு!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Elevator crash in wedding hall ... cctv footage

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் லிப்ட் கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் திருமணத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமண விழா நடைபெற்றது. அப்பொழுது மண்டபத்தின் கீழ் தளத்திலிருந்து முதல்தளத்திற்கு உணவை பெரிய லிப்டில் எடுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக லிப்ட் கம்பி அறுந்து விழுந்தது. இதில் உணவு பரிமாற சென்ற 2  பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு சீஸல் மாணவன் தலை நசுங்கி உயிரிழந்தான். உணவு பரிமாறும் வேலைக்கு வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்ட் கம்பி அறுந்து விழுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவன் சீஸலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

350 கிலோ எடையை தூக்கும் திறன் கொண்ட அந்த லிப்டில் அதிக எடைகொண்ட உணவு பொருள் மற்றும் மூன்று பேரின் எடை என அதிக எடை ஏற்றப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவன் சீஸலின் அண்ணன் தனுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஜெயப்ரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் என 4  பேர் மீது போலீசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.