நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை எஸ்.பிக்கள் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி மூலம் தேர்தல் ஆணையர் இந்த ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இன்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் கண்காணிப்பாளர் அதேபோல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காணொளி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று அதிகமாக இருக்கக் கூடிய சூழலில் எப்படி தேர்தலை கையாளுவது, மறைமுக தேர்தல் எவ்வாறு கையாள்வது, தேர்தல் பணிக்கான நியமனங்கள் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.