தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது. இதற்கான அனைத்துக்கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக சார்பில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. திமுக சார்பில் அக்கட்சியினர் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். பாஜக சார்பிலும் அமித்ஷா சில ஆலோசனைகளை தமிழகம் வந்த போது நடத்தினார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய நிலையில், பாஜக தரப்பில் இதுவரை எந்த பதிலும் சொல்லப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் குழு இன்று சென்னை வருகை தர உள்ளனர். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்கள். எனவே விரைவில் தமிழக தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.