Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் நேரில் ஆதரவு திரட்டினர்.

Advertisment

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

Advertisment

அடுத்த மாதம் 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

இந்த நிலையில், பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடைப் போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமபித்துரை எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

அதைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்ற பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அவருக்கு பொன்னாடைப் போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டினர்.

இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.