Skip to main content

சென்னை அருகே கடலில் நிலநடுக்கம்!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

kk

 

சென்னை அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 320 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

டெல்லியில் நிலநடுக்கம்

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Earthquake in Delhi

 

டெல்லியில் திடீரென ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, சஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு காணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 3.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.