Skip to main content

குடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்!!

police

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதியபேருந்து நிலையம் அருகில் மீன்மார்கெட் உள்ளது. இதன் அருகிலேயே இரு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதனால் காலை முதலே குடிமகன்களின் ஆக்கிரமிப்பில் மீன் மார்கெட் உள்ளது. மீன்கடை மற்றும் புதியபேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மீது பாட்டில்,தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை வீசுவது, ஆபாச வார்த்தைகளை பேசுவது. ஆடைகளின்றி கிடப்பது. இதனால் அப்பகுதி செல்லும் பெண்கள் முகம் சுழிக்கின்றனர். இதுபற்றி பலமுறை காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தும் எந்த ஒரு பயனுமில்லை.

 

police

 

இதுபற்றி கீழக்கரை காவல் ஆய்வார் முத்து மீனாட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, ஓ! அப்படியா என்றவர், எந்த இடத்தில் மதுகுடிக்கிறார்கள், யார் விற்பனை செய்கிறார்கள் என்ற தகவல்களை எங்களுக்கு சொல்லுங்கள், அல்லது புகைப்படம் எடுத்து எங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என்று கூறினார்.

 

 

நன்றாக உள்ளது சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் ஹெல்மெட் போடாதாவர்களை பிடிப்பதில் காட்டும் அக்கறை. பொதுமக்களை தொந்தரவு செய்யும் குடிமகன்கள் மீதும் அக்கறை காட்டலாமே.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்