Skip to main content

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம்- சிபிசிஐடி

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Don't release videos related to Kallakurichi student's Issue CBCIT

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக போலீசார் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. மாணவி மரண வழக்கில் புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை பாதிக்கும் வகையில் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம். தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தால் 90038 48126  என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான விசாரணை மேற்கொள்ளவும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்