Document found in the car: Bribery officers who folded the owner in the rice mill

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 6 மாவட்டங்களில் நடைபெற்றுவரும் இந்த சோதனையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனம் மற்றும் அவருடைய உறவினர்கள், உதவியாளர்கள் என ஒவ்வொருவருடைய வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக இன்று (18.10.2021) காலை திருச்சி எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி பகுதியில் வசித்துவந்த விஜயபாஸ்கரின் உதவியாளர் குருபாபுவின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவருடைய காரில் கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதனை சோதனை செய்தனர். பின்னர் அந்த ஆவணத்தின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் பாப்பா காலனியில் உள்ள சிவா ரைஸ் மில்லின் உரிமையாளரான சுதாகர் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு தற்போது சோதனை நடத்திவருகின்றனர்.