Skip to main content

"ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்" -மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

dmk president mkstalin meet with tamilnadu governor

 

 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஆளுநருடனான சந்திப்பின்போது, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் உடனிருந்தனர்.

 

dmk president mkstalin meet with tamilnadu governor

 

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், "பேரறிவாளன் உள்பட ஏழு பேரை உடனே விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் பரிசீலித்து முடிவு செய்வதாக ஆளுநர் கூறினார். ஏழு பேர் விடுதலை காலதாமதத்திற்கு ஆளுநர் சட்ட விளக்கங்களை தந்தார். மனிதாபிமான அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். தமிழக ஆளுநரிடம் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம்; அதை வெளியில் சொல்ல முடியாது." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்