DMK petitions Trichy Police Commissioner to take action against person who spreads misinformation  about Tamil Nadu Chief Minister

திமுகதகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள அருண், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

Advertisment

அந்தப் புகார் மனுவில், ‘கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் தமிழக முதல்வர் குறித்து தென்னூரைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சாட்டையடி சகாபுதீன் என்ற நபர் அவதூறு பரப்பிவருகிறார். முன்னாள் அமைச்சரையும், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சரையும், முன்னாள் முதலமைச்சர் குறித்தும் அவதூறாகப் பேசிவருகிறார். மேலும், அரசைக் கொலைகார ஆட்சி என்றும், சிறைவாசிகளை விடுதலை செய்யாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஒன்றுதிரட்டி போராடுவேன் என்றும் தெரிவித்துவருகிறார்.

Advertisment

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் காணொளி மூலம் பரப்பியும்வருகிறார். இந்தக் காணொளிகள் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும் மத கலவரத்தைத் தூண்டும் வகையிலும் இருப்பதால் மேற்கண்ட நபர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யாஉள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (24.11.2021) காலை திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்துப் புகார் மனுவை அளித்துள்ளனர்.