Published on 29/05/2021 | Edited on 29/05/2021
![DMK MP A. Razza's wife Parameswari passes away](http://image.nakkheeran.in/cdn/farfuture/3hPuV-PDzktKhUzts3C1S3R10p8-47yMWm4ZE14ivGo/1622298846/sites/default/files/inline-images/arasa1.jpg)
நீலகிரி திமுக எம்.பி ஆ.ராசாவின் துணைவியார் பரமேஸ்வரி காலமானார் என அவர் சிகிச்சை பெற்று வந்த ரெலா மருத்துவமனை தற்போது அறிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (53) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த ஆறு மாத காலமாக புற்றுநோய்க்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று இரவு 7.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இவரின் மறைவுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.