Skip to main content

வாக்கு வேட்டையில் மு.க.ஸ்டாலின்:திருவாரூர் கோலாகலம்

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும்  நிகழ்சியில் பங்கேற்க  திருவாரூர் வந்தடைந்தார். தொடர்ந்து வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.


 

dmk

 

திருவாரூரில் மக்களவைத் தேர்தலில் தோழமை கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் சட்டமன்ற  இடைதோ்தலில்  போட்டியிடும் திமுக மாவட்ட செயலாளருமான வேட்பாளர் பூண்டி.கலைவாணன் இருவரையும் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்சியில் பங்கேற்பதற்காக  மாலை சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தடைந்தார்.

 

அவருடன் அவரது மனைவி துர்காஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் மகேஸ் பொய்யாமொழி உடன் வந்தடைந்தனர்.
 

 

dmk

 

தொடர்ந்து காட்டூர் கிராமத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிந்த மறைந்த திமுக தலைவர் கலைஞர் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார்.
 

பின்னர் வரும் வழியில் வாகனத்தில் இருந்தவாரே சாலை ஒரம் நின்ற மக்களிடம் காட்டூர், இலவங்கார்குடி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்பு சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரம் குறித்து ஆலோனையில் ஈடுபட்டார்.
 

இன்று  20 ம் தேதி காலை திருவாரூரில் நடைபயணப் பிரச்சாரத்தை நகரத்தில் துவக்கி வாக்கு சேகரித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்