கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது திவான்சாபுதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 10,000த்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட (மொத்தம் 8,556) இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள்.
கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக சார்ந்த நபர்களே ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்துவந்தனர். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. திமுக ஆதரவு பெற்ற வேட்பாளராக கலைவாணி சிலம்பரசன் போட்டியிட, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இவர் வெற்றிபெற வேண்டி டாக்டர். மகேந்திரன் உட்பட கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் அனைவரும் உழைத்தனர்.
பலவகையான வியூகங்கள் வகுத்த டாக்டர் மகேந்திரன் உட்பட திமுகவினரின் செயல்பாடுகளைக் கண்டு அதிமுக முகாம் கலகலத்துப் போனது. முன்னாள் அமைச்சர்கள் 'மணி'யோடு களத்தில் இறங்கியும் அதிமுக தோல்வியடைந்துள்ளது என்கின்றனர் திமுகவினர்.