Published on 03/11/2021 | Edited on 03/11/2021
திருமணமான முதலாமாண்டு வரும் தீபாவளியை தலை தீபாவளி என்று புதுமண தம்பதிகள் விமர்சையாக கொண்டாடுவது தமிழகத்தில் வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு தஞ்சை சரகத்தில் புதிதாக திருமணம் முடிந்த 202 காவலர்களுக்கு தலை தீபாவளியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சை சரகத்திற்கு உட்பட்ட தஞ்சை மாவட்டத்தில் 84 காவலர்களுக்கும், திருவாரூரில் 58 பேர், நாகையில் 47, மயிலாடுதுறையில் 14 பேர் என 202 காவலர்களுக்கு தலை தீபாவளி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை சரக டிஐஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.