Skip to main content

செம்மண் கொட்டி சீரமைக்கப்பட்ட சாலை; வாகன ஓட்டிகள் அதிருப்தி

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

Dindigul road people dissatisfied

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

 

மதுரை - கொடைக்கானல் முக்கிய சாலையாகவும், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ள சாலையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்தச் சாலை சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்வதால் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம்  வலியுறுத்தப்பட்டது. 

 

இதனையடுத்து சாலையை சீரமைக்க வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், ஒரு தள்ளு வண்டியில் செம்மண்ணை எடுத்து வந்து சாலையில் உள்ள பள்ளங்களில் கொட்டினர். அந்த ஊழியர்களிடம் ஜல்லி தார் கலவை கொண்டு பேட்ச் ஒர்க் என்ற பணியை செய்யாமல் செம்மண்ணை கொட்டி விட்டு போகிறீர்களே என பொதுமக்கள் கேட்டதற்கு, அதிகாரிகள் ஜல்லி தார் கொடுத்தால் அது கொண்டு வந்து போடுவோம் எங்களிடம் இப்போது செம்மண்ணைத்தான் கொடுத்துவிட்டார்கள் என கூலாக பதில் சொல்லிவிட்டு சென்றனர். நெடுஞ்சாலைத் துறையினரின் செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை நல்ல முறையில் சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்