கொட்டும் மழையிலும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கொட்டும் மழையிலும் ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளப்பட்டி, பாரைப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடித்தண்ணீர், சாலை வசதிக் கேட்டவர்களுக்கு உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, கிராமப் புற ஏழை மக்கள் கட்டி வரும் தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுத்து நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், கட்டிடப் பொருட்களான சிமெண்ட், கம்பி, ஆகியவற்றைத் தாமதமின்றி வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.